நாளை கல்யாணம்.. இன்று காதலியை கொடூரமாக கொன்ற காதலன்

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மகள் விக்னேஸ்வரி (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னோடு பணிபுரிந்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபனை 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தீபனுக்கும் விக்னேஸ்வரிக்கும் வருகின்ற 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்று விக்னேஷ்வரியை பார்க்க வந்த அந்த இளைஞர் விக்னேஸ்வரியின் வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் பேசிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் விக்னேஸ்வரியும் தீபனும் விக்னேஷ் வரியின் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து காலையில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் கொளத்தூர் பகுதியில் தலையில் படுகாயத்தோடு விக்னேஸ்வரி இறந்த நிலையில் இருப்பதாக விக்னேஸ்வரியின் குடும்பத்திற்கு தகவல் தெரிய வரவே, விக்னேஷ் வரியின் குடும்பத்தினர் விக்னேஷ் வரியின் சடலத்தை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விக்னேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விக்னேஷ்வரியின் காதலன் தீபன் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், விக்னேஷ்வரியின் காதலன் கல்லால் அடித்துக் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீபன், விக்னேஷ்வரியை டைல்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்தது உறுதியானது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தபோது, ஏற்பட்ட தகராறில் தீபன், விக்னேஷ் வரியை கொலை செய்து விபத்து போல் சித்தரித்துள்ளார். இதையடுத்து தீபனை போலீசார் கைது செய்தனர்.