மின்கம்பத்தை தொட்டதும் பிரிந்த சிறுவனின் உயிர்.. “அநியாமா என் குழந்தை போய்டுச்சே” என கதறும் பெற்றோர்

 
ச்

திருச்சியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரம் சிந்தாமணி அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மகன் விரித்திவ் அஜய்(12). அவர் திருச்சியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு அவர் ஆண்டாள் வீதி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப் பொழுது அங்கு இருந்த மின்கம்பத்தில் கை வைத்துள்ளார். அங்கு பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயர் அவர் மீது உரசி உள்ளது. இதில் அந்த சிறுவன் மீது மின்சாரம்  பாய்ந்து அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.