மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

 
ச் ச்

வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பார் கூட்டம் கிராமத்தில் வசிக்கும் தர்மர் மகன் கௌஷிக்(11) தற்பொழுது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ‌தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள நிலையில் நண்பர்களுடன் வயல் வெளிப்பகுதியில் விளையாட சென்ற பொழுது அங்கு நேற்று நள்ளிரவு பெய்த தொடர் மழை மற்றும் காற்றால் பனைமரம் முறிந்து விழுந்து மின் வயர் அறுந்து கீழே கிடந்துள்ளது. 

அப்பொழுது கௌஷிக் வளர்க்கும் வளர்ப்பு நாய் அறுந்து கிடந்துள்ள மின் வயரை மிதித்து மின்சாரம் தாக்கி துடிதுடித்து வந்தது. இதனை பார்த்த சிறுவன் நாயைக் காப்பாற்ற சென்ற போது மின் வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பின் அவரது உடல் மீட்கப்பட்டு பரமக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து நயினார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.