விஜய், சங்கீதா இருவரும் ஏப். 20ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், மேலும் வழக்கில் தொடர்புடைய சங்கீதா மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற என்பதால் அதற்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் மாவட்ட நீதிமன்றத்தில் அன்னைக்கு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் அதன்படி விஜய் மனைவி சங்கீதா தற்போது செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வைத்துள்ளார். சிவில் வழக்கு என்பதால் வரையறும்புக்கு உள்ளே இருக்கும் இடத்தில் தான் முதலில் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் அதன் பிறகு வழக்கு மாற்றுதல் மூலமாக சென்னைக்கு மாற வாய்ப்பு உள்ளது. தேர்தலில் அனைத்து தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தனக்கான முயற்சிகளையும், தனக்கான வெற்றி வாய்ப்பையும் தேடி களப்பணியில் இறங்கியுள்ளார்கள். அதேபோல விஜய் அவர்களும் தமிழக மக்களிடம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ள தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்தை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்/ இது குடும்ப வழக்கு என்பதால் தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் வழக்கறிஞர் பெருமாள் பேட்டியில் தெரிவித்துள்ளார்

