மாநில உரிமை குழுவுக்கு பூட்டா? – ஸ்டாலின் வெளியிட்ட காரசாரப் பதிவு!
Updated: Nov 7, 2026, 11:59 IST1794032997021
திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது; இக்குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அசோக்வர்தன் ஷெட்டி, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.இந்த குழுவை தவெக அரசு கலைத்து உத்தரவிட்டது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'' மாநில உரிமைகளுக்கு தடை? சினிமா திரையரங்க உரிமைகளுக்கு தடையில்லையா?'' என குறிப்பிட்டுள்ளார்.சில தினங்களுக்கு முன், புதிதாக தமிழ் திரைப்படங்களை வெளியிடும் நாட்களில் இருந்து ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சி திரையிட, தமிழக அரசு அனுமதி அளித்து இருந்ததை ஸ்டாலின் குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

