"இன்றே புக்கிங் செய்ய ரெடியாகுங்க!" சென்னை சிறப்பு ரயில் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடக்கம்!

 
train

தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

சிறப்பு ரயில்களின் விவரங்கள்

1. ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள்

வண்டி எண் 06104 (ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர்): நவம்பர் 05 (வியாழக்கிழமை) இரவு 20:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

வண்டி எண் 06103 (சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம்): நவம்பர் 07 (சனிக்கிழமை) நள்ளிரவு 00:30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில், அதே நாள் மாலை 15:50 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த ரயில்கள், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்லும்.

2. ராமேஸ்வரம் – தாம்பரம் ஒருவழி சிறப்பு ரயில்

வண்டி எண் 06108 (ராமேஸ்வரம் – தாம்பரம்): நவம்பர் 09 (திங்கட்கிழமை) மாலை 16:55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில், ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக செல்லும்

3. திருவனந்தபுரம் நார்த் – தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில்கள்

வண்டி எண் 06164 (திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம்): நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை) இரவு 20:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் அடையும்.

வண்டி எண் 06163 (தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு): நவம்பர் 11 (புதன்கிழமை) மதியம் 14:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 05:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை சென்றடையும்.
வழித்தடம்: நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு.

4. சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள்

வண்டி எண் 06037 (சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம்): நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 00:30 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாள் மாலை 17:30 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.

வண்டி எண் 06038 (ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர்): நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை) இரவு 20:15 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

5. தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில்கள்

வண்டி எண் 06089 (தாம்பரம் – செங்கோட்டை): நவம்பர் 09 (திங்கட்கிழமை) இரவு 23:55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் மதியம் 12:15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

வண்டி எண் 06090 (செங்கோட்டை – தாம்பரம்): நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை) மதியம் 15:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 03:20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஶ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செல்லும்.

6. திருவனந்தபுரம் வடக்கு – சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு

வண்டி எண் 06158 (திருவனந்தபுரம் நார்த் – சென்னை எழும்பூர்): நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை) இரவு 19:40 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மதியம் 13:00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

வண்டி எண் 06157 (சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் நார்த்): நவம்பர் 11 (புதன்கிழமை) மதியம் 15:15 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 07:15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை சென்றடையும்.

இந்த ரயில்கள்(ஈரோடு, சேலம் வழியாக): கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழிகா செல்லும்.

முன்பதிவு விவரங்கள்
ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் (06104 / 06103) சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 03 (செவ்வாய்க்கிழமை) காலை 08:00 மணி முதல் தொடங்கும். மற்ற சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.