உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..! செப்டம்பரில் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!

 
school

செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையவுள்ளது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வருகிற செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வாராந்திர வழக்கமான விடுமுறை நாட்கள் வருகின்றன. இதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பது உறுதியாகியுள்ளது.

செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குடும்பத்துடன் வெளியூர் செல்லவும், சுற்றுலா மற்றும் கோயில் பயணங்களை திட்டமிடவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல் அரசு ஊழியர்களும் இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்குச் செல்லவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.