வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
Apr 23, 2024, 14:34 IST1713863051895
சென்னையில் தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலம் - கோயம்பேடு சாலையில் அமைந்துள்ளது வி.ஆர் மால் . இந்த வணிக வளாகத்தில் தியேட்டர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், உணவகங்கள் என ஏராளமான கடைகள் பப் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த வணிக வளாகத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் பிரபல வணிக வளாகமான வி.ஆர். மாலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது . இமெயிலில் வி.ஆர் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அத்துடன் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.