திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசியில் கிடைத்த தகவலால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டியிருக்கிறார். அந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே மோப்ப நாய்களுடன் விமான நிலையத்துக்கு வந்த நிபுணர்கள் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இதனிடையே தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதையும் கண்டறிய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மர்மமான பொருட்கள் ஏதேனும் கிடைக்கிறதா என தீவிர சோதனையிட்டு வருகின்றனர். இந்த தகவல் பயணிகளுக்கும் பரவியதை அடுத்து, அவர்களது உடமைகளை வேகவேகமாக சோதனை செய்த பிறகு பயணிகளை வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.