#BREAKING சிக்கந்தர் தர்காவுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
Dec 10, 2025, 18:36 IST1765372014155
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரியரத வீதியில் உள்ள பள்ளிவாசலிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கதர் பாதுஷா தர்காவிற்கும் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்ததையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை முடிவில் வெடிகுண்டு மற்றும் எரிபொருட்கள் காணப்படவில்லை அல்லது எடுத்து வெடிகுண்டு குறித்து வீண் புரளியை கிளப்பி உள்ளனர் என தெரிய வந்தது .


