நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
Oct 8, 2025, 04:55 IST1759879516000
சென்னையில் சில தினங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையம், முன்னாள் தலைமைச்செயலர், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோப்பநாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வீடு மற்றும் வீட்டு வளாகம் முழுவதும் தேடினர்.
சோதனையின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து அது புரளி என உறுதி செய்யப்பட்டது.


