கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

 
கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நட​த்திய ​தீவிர சோதனையில் மிரட்டல் செய்தி புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.

முன்னதாக நேற்று முன் தினம் நள்ளிரவில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கும், சாய்பாபா கோவிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.