நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.  குறிப்பாக நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் வெற்றி ,வசூல் ஆகியவற்றுடன் சேர்த்து சர்ச்சையும் உண்டாவது வழக்கம் . அத்துடன் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்பது அவரது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.  இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக முதற்கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

vijay 67

இந்நிலையில் நடிகர் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது . இதையடுத்து விஜய்யின் வீட்டுக்கு விரைந்த நீலாங்கரை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.  மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து அவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

vijay-car-issue

விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இவர் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது