நாடு முழுவதும் 30 மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Aug 18, 2024, 11:15 IST1723959939618
நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனே அங்கு விரைந்த திருமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்துவருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. அடிக்கடி இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.