ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் இந்த தகவல் புரளி என கூறப்படுகிறது. ஆனாலும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.. இதே போல் கடத்தல் சில நாட்களுக்கு முன்பு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு போலியான இ-மெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.


