முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்திற்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோபாலபுரம் நான்காவது தெருவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்திற்கு இன்று மாலை மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தெரியபடுத்தினர். இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், இது புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது பின்புலம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
1955-ம் ஆண்டு சர்வேஸ்வர அய்யர் என்பவரிடம் இருந்து இந்த வீட்டை வாங்கிய கருணாநிதி, அப்போதிலிருந்து தனது கடைசி காலம் வரைக்கும், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.