விமானத்தில் வெடிகுண்டு?- சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் இருந்து கோவாவிற்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தை துருவித் துருவி சோதனை விடுகின்றனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, இன்று மாலை 5.40 மணிக்கு, கோவாவிற்கு புறப்பட இருந்த இண்டிகோ பயணிகள் விமானம், 176 பயணிகள் 6 விமான ஊழியர்கள், வழக்கம் போல் ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே தங்கள் உடமைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் அனைவரும் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விமானத்தில் அமர வைக்கப்பட்டனர். விமானம் புறப்படுவதற்கு தயாரான நிலையில், கோவா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக புறப்பட தயாராக இருந்த விமானம் புறப்படுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு, பேவிற்க்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோப்பநாய்கள் உதவியுடன், அனைத்து பயணிகளையும், முதலில் விமானத்திலிருந்து கீழே இறக்கினர்.
அதனை தொடர்ந்து விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கைபை உட்பட, அனைத்து உடைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டது முதலில் பயணிகள் அனைவரையும் சோதனை மேற்கொண்டு, பாதுகாப்பான இடத்தில் அமர வைத்துக் கொண்டு உடைமைகள் அனைத்தையும் ஒன்று ஒன்றாக இறக்கி, சோதனையில் உட்படுத்தி வருகின்றனர். மூன்று மணி நேரமாக, மோப்பநாய் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்னும் உள்ள 48 உடமைகளும் தீவிரமாக ஆய்வில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தின் விமானம் புறப்படும் பகுதியில் பரபரப்புடன் காணப்படுகிறது. அது மட்டும் இன்றி மோப்ப நாய்கள் பாதுகாப்பு படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் என அனைவரும் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

