விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா..!!
இந்தோனேசியாவில் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு முதுகுத்தண்டில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நுஷ்ரத், தமிழில் சந்தானத்துடன் ‘வாலிப ராஜா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
பிரபல இந்தி நடிகையான நுஷ்ரத் பருச்சா, தமிழில் சேது, சந்தானம் நடித்த ‘வாலிப ராஜா’ படத்தில் நடித்துள்ளார். இவர் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காகவும் விடுமுறைக்காகவும் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இதில் அவர் முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

