பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு..!

 
1

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த மூன்று பேர், 10 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் காயமடைந்தனர். நடிகர் டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பினார். ஜூஹு காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மும்பை ஜூஹூ பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு 3 பைக்கில் வந்த கும்பல், அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். கார் டிரைவர் உள்பட இருவர் காயமடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 12 தனிப்படைகளை அமைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலை தேடி வருகின்றனர். நடிகர் மீது எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டைகர் ஷெராப் மீதான கொலை முயற்சி சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. ஏற்கனவே, இந்த கும்பல் ஹிந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது.லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் என்பவன், இந்த சம்பவம் குறித்து ஆடியோ வெளியிட்டுள்ளான். அதில், 'சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றினால் இதுதான் கதி. எங்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். சல்மான் கானுடன் இணைந்து படம் நடிக்கும் திரையுலகினருக்கு இதுவே இறுதி எச்சரிக்கை, எனக் குறிப்பிட்டுள்ளான்.