பிரபல பாலிவுட் நடிகர் முஷ்டாக் கான் காலமானார்..!
ஹிந்தி திரையுலகில் தனது நகைச்சுவை மற்றும் சிறந்த துணைக் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற பிரபல மூத்த நடிகர் முஷ்டாக் கான், புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.
வியாழக்கிழமை மாலை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அவரது மகன் மொஹ்சின் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் மொஹ்சின் தெரிவிக்கையில், "அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு வரை அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் ஷேராவின் மகன் அறிமுகமாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆரோக்கியமாகவே பங்கேற்று வந்தார்" எனக் கூறினார்.
மேற்கு இந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பின் (FWICE) தலைவர் பி.என். திவாரி தெரிவிக்கையில், "அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.
முஷ்டாக் கானின் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரும் பிரபல இயக்குநருமான அசோக் பண்டிட் கூறுகையில், "முஷ்டாக்கும் நானும் நீண்டகால நண்பர்கள். நாங்கள் ஒன்றாக நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளோம். ஒரு சிறிய நகரத்தில் இருந்து மும்பை வந்து, நாடகக் கலை பயின்று, தனது திறமையால் திரையுலகில் உயர்ந்த ஒரு மிகச்சிறந்த மனிதர் அவர். சதீஷ் ஷா, சதீஷ் கௌசிக் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது முஷ்டாக் கானையும் இழந்துள்ளோம். இது திரையுலகிற்கும் எனக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்" எனத் தனது இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.
நான்கு தசாப்த கால திரைப் பயணம்:
1980-ஆம் ஆண்டு வெளியான 'ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா க்யோன் ஆதா ஹை' (Albert Pinto Ko Gussa Kyon Aata Hai) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான முஷ்டாக் கான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமாவில் முன்னணி துணை நடிகராகப் பணியாற்றியுள்ளார்.
'ஆஷிகி', 'ஹம் ஹைன் ரஹி பியார் கே', 'ராஜா', 'ஹேரா பேரி', 'காடார்: ஏக் பிரேம் கதா', 'ஜோடி நம்பர் 1', 'முஜ்சே ஷாதி கரோகி', 'வெல்கம்', 'வாண்டட்' மற்றும் 'ஓ மை காட்' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
குறிப்பாக 2007-ஆம் ஆண்டு வெளியான 'வெல்கம்' திரைப்படத்தில் இவர் நடித்த நகைச்சுவைக் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் வெளியான 'ஸ்த்ரீ', 'பதாய் தோ', 'காடார் 2' மற்றும் 'ஸ்த்ரீ 2' ஆகிய திரைப்படங்களிலும் இவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் 'குச் ரங் பியார் கே ஐஸே பி' போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மறைந்த நடிகர் முஷ்டாக் கானின் இறுதிச்சடங்குகள் வெள்ளிக்கிழமை மும்பை யாாி ரோடு கபரிஸ்தானில் (Yari Road Kabristan) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.