“பழையன கழிதலும் புதியன புகுதலும்” போகி கொண்டாட்டம் கோலாகலம்

 
போகி

சென்னையில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

பழையன கழிதலும், புதியன புகுதலும்- போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய  மக்கள் || people celebrates Bhogi festival across tamil nadu today

மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகி பண்டிகை 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற அடிப்படையில் பயன்படுத்திய மற்றும் தேவையற்ற பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவது வழக்கம். அதன்படி சென்னையில் அதிகாலை வேளையில் பொதுமக்கள் பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டு கொளுத்தி போகி பண்டிகையை இன்று கொண்டாடினர். அப்போது சிறுவர்கள் மேளம் அடித்து கொண்டாடினர். இந்த ஆண்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் வழக்கத்தை விட குறைவாகவே பொதுமக்கள் வீட்டின் முன்பு பழைய பொருட்களை எரித்தனர். 

குறிப்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கத்தை கைவிட்டு, சூழலுக்கு உகந்த வகையில் பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். டயர்களை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் என சென்னை மாநகராட்சி  எச்சரிக்கை விடுத்திருந்ததால், பொதுமக்கள் பழைய பாய்கள், கோணி, துணி போன்றவற்றை போட்டு எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினர்.