தவெக மாநாட்டுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

 
தவெக மாநாட்டுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்குச் சென்ற வேலூர் இளைஞர் கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டார்.

ச்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர்.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்குச் சென்ற வேலூர் இளைஞர் கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டார். கஸ்பா நகரைச் சேர்ந்த மதன் தனது நண்பர்களுடன் தவெக மாநாட்டிற்கு காரில் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது திருச்சி அருகே ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது மதன் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், 22 ஆம் தேதி அரவக்குறிச்சியில் சாலை விபத்தில் இறந்தது தெரியவந்துள்ளது.