என்கவுண்டரில் கொல்லப்பட்ட இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

 
death

செங்கல்பட்டில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 2 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு அப்பு என்கின்ற கார்த்திக், மகேஷ் ஆகியோரை இரட்டை படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ், மொய்தீன், மாதவன், ஜெசிக்கா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தது.

இந்நிலையில் நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள், நாட்டு வெடிகுண்டு மறைத்து வைத்திருந்த நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் போலீசார் என்கவுண்டரில் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இருவரது உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று செங்கல்பட்டு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் விசாரணைக்குப் பிறகு மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.