செப்.1 முதல் போர்டிங் பாஸ் முத்திரை குத்தும் முறை நிறுத்தம்..!!

 
Plane - Flight

நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் உள்ள குடிவரவு மையத்தில் பயணச்சீட்டில் முத்திரை குத்துவது என்பது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவு பணியகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, இந்திய விமான நிலையங்களில் இருந்து செல்லும் சர்வதேச பயணிகள் தங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள இ டிக்கெட் அனுமதிச் சீட்டை காட்டினால் போதும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'முத்திரையிடுவதால் பயணச்சீட்டுகளை படிப்பது கடினமாக உள்ளது.

பயணிகளுக்கு நேரடியாக முத்திரையிடுவது சிரமத்தை ஏற்படுத்துவதையும் அறிந்தோம். தொடர் புகார்கள் எதிரொலியாக, பயணச்சீட்டுகளில் முத்திரை குத்துவதை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது' என்று கூறினர்.