ப்ளாக் பஸ்டர் கூட்டணி இஸ் பேக்..!
Nov 4, 2025, 04:55 IST1762212312000
மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்திருந்தனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் 55 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. சுத்தர் சி- விஷால் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆனாலும், நகைச்சுவையால் படம் ஹிட்டானது.
இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி விரைவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடிய விரைவில், சுத்தர் சி- விவால் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


