அண்ணாமலை மீது பழிபோடுவதை ஏற்க முடியாது: கரு. நாகராஜன்

 
karu

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசிய போது, அதிகமாக பேசியதே அண்ணாமலைதான். அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். பாஜக மாநில தலைவராக, எல்.முருகனும், தமிழிசை சௌந்தரராஜனும் இருந்த வரை கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. பாஜக மாநில தலைவராக, அண்ணாமலை பதவியேற்ற பின், அதிமுக தலைவர்களை விமர்சித்ததாலயே பிரச்னை துவங்கியது.

Annamalai

அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை.கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும்.  விலகினால் அவ்வளவுதான். அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்திருந்தால் லோக்சபா தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும். என்றார். 

karu nagarajan bjp

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அண்ணாமலை மீது அதிமுக பழி போடுவதை ஏற்க முடியாது வாய்ப்புகள் இருந்தும் அவற்றைத் தவறவிட்டது அதிமுக தான்; பாஜக தலைமை சொன்னபடி தமிழகத்தில் தேர்தல் பணிகளை அண்ணாமலை மேற்கொண்டார் என்றார்.