அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடக்கிவாசிக்க வேண்டும் - பாஜக கடும் விமர்சனம்!!

 
tn

செய்த பிழையை மறக்க திராவிடக்கட்சிகளுக்கு தனிமனித தாக்குதல் என்பது  பொதுயுக்தி என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் .உதயநிதி சனாதனத்தை அழிப்பேன் என்று முழங்கும்போது அதற்கு அடிப்படையாக அண்ணாவும்,பெரியாரும் பேசிய வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டுசெல்வது தமிழகத்தின் பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் பாஜகவின் கடமை.

jayakumar

மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் ஜெயலலிதா அம்மையார் அவமானப்பட்டதை பாராளுமன்றத்தில் பேசியபொழுது, அதை ஏற்றுக்கொண்டு வரவேற்ற அதிமுக தலைவர்கள், சனாதனத்தை அவமதித்த  உண்மை வரலாற்றை அண்ணாமலை பேசும்போது மட்டும் கொந்தளிப்பது ஏன்?

Annamalai

செய்த பிழையை மறக்க திராவிடக்கட்சிகளுக்கு தனிமனித தாக்குதல் என்பது  பொதுயுக்தி.உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அடிப்படை நாகரீகத்தை கற்றுத்தந்துள்ளது. பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடக்கிவாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு. என்று குறிப்பிட்டுள்ளார்.