காலை உணவுத்திட்டத்தை விமர்சித்த பாஜக நிர்வாகி கைது

 
காலை உணவு திட்டம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புதுக்கோட்டை பாஜக ஐடி விங்க் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். 

stalin

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின். 

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புதுக்கோட்டை பாஜக ஐடி விங்க் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெள்ளனூர், நாகுடி காவல்நிலையங்களில் திமுக நிர்வாகிகள் புகார் அளித்த நிலையில் கமலகண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்தனர்.