காங்கிரஸார் வந்து சென்றதால் மஞ்சள் தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்த பாஜக மகளிர் அணி!
புதுச்சேரி காங்கிரசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலக வாயிலில், மஞ்சள் தண்ணீர் தெளித்து தீட்டு கழித்த பாஜக மகளிர் அணியினரால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சாதிய வன்மம் தலைக்கேறிய நாய்கள்…
— D Force (@DforceOffl) February 22, 2026
காங்கிரஸ் மகளிரணி தலைவர் போராட்டத்திற்கு வந்த இடத்தை கழுவி தீட்டு கழிப்பதாக கூறும் பாஜக சாதிவெறி மதவெறி கும்பல் !! 😡😡😡 pic.twitter.com/63bK06dy6U
சாதிய வன்மம் தலைக்கேறிய நாய்கள்…
— D Force (@DforceOffl) February 22, 2026
காங்கிரஸ் மகளிரணி தலைவர் போராட்டத்திற்கு வந்த இடத்தை கழுவி தீட்டு கழிப்பதாக கூறும் பாஜக சாதிவெறி மதவெறி கும்பல் !! 😡😡😡 pic.twitter.com/63bK06dy6U
டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து புதுச்சேரி பாஜக இளைஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு ராகுல் உருவப்பொம்மையை எரித்னர். தொடர்ந்து புதுச்சேரி காங்கிரசார் பாஜக தலைமை அலுவலகம் அருகே பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்தனர்.
இந்த மோதலுக்கு பிறகு பாஜக மகளிர் அணியினர் பாஜக தலைமை அலுவலக வாயில் பகுதியை மஞ்சள் தண்ணீர் தெளித்து தண்ணீர் ஊற்றி கழுவினர். இதுபற்றி பாஜக மகளிர் அணியினர் கூறுகையில், காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பாஜக அலுவலகம் பகுதிக்கு வந்து சென்றதால் மஞ்சள் தண்ணீர் ஊற்றி தீட்டு கழிக்கிறோம் என கூறினர்.

