பாஜக சார்பில் 25,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய வினோஜ் பி செல்வம்!

 
vinoj

மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சென்னையில் உள்ள முக்கிய சிவாலயங்களில் பாஜக சார்பில் அன்னதானம் வழங்கினார். 

நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சென்னையில் உள்ள முக்கிய சிவாலயங்களில் பாஜக சார்பில் அன்னதானம் வழங்கினார். பாஜக சார்பில் சுமார் 25,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. 

vinoj

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள  ஸ்ரீ பரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரர்  திருக்கோயில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்,  வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்,  எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள  ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோவில்களில் இந்த அன்னதானம் நடைபெற்றது.