NDA கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பதட்டம்- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன் முக ஸ்டாலின் வானதி சீனிவாசன் முக ஸ்டாலின்

மக்கள் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், என்.டி.ஏ கூட்டணியை பார்த்து திமுக பதட்டமாகி வருவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி பொறுப்பாளரான பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று தொகுதி மக்களிடம் கட்சியை கொண்டு சேர்த்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விளக்கமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “234 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய பொறுப்பாளர்கள் நியமித்துள்ளனர். அதன்படி திருப்பூருக்கு வந்துள்ளேன். தேர்தல் அறிக்கைக்காக தொகுதியின் முக்கிய பிரச்சினை மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதி பாஜகவிற்கு சாதகமான தொகுதி. கட்சி தலைமை முடிவு செய்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்துவதே நோக்கம்‌ . இந்த அறிக்கைகளை கட்சி தலைமையிடம் வழங்குவோம். திமுக கனவு கற்பனை உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.

மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை மக்கள் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட முதல்வர். திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்கள் கனவு. தொழில் நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் சொத்துவரி என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. குப்பை பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளது. கோவை திருப்பூர் கொடுத்த வரி எங்கே? திமுக அரசு தோல்வி அடைந்த அரசு. சி.பி. ராதாகிருஷ்ணன் பெருந்தன்மையாக கூட்டத்தை நடத்தினார். திமுக அரசில் ஒரு துறையில் கூட நேர்மை என சொல்ல முடியாது. ஆனால் மோடி அரசை ஏதாவது சொல்ல வேண்டும் என அவையை முடக்க முயல்கின்றனர். திமுகவிடம் தான் பதட்டம் உள்ளது. கமல்ஹாசன் பேசியது உங்களுக்கு புரிந்ததா? எனக்கு புரியவில்லை. அது புரியாமல் தான் கோவை மக்கள் அவரை அனுப்பி வைத்தனர். பெரியார் சொன்னதை மத்திய அமைச்சர் மேற்கொள் காட்டியது புரியாமல் பேசுகிறார். இந்த சுற்றுப்பயண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தந்தைக்கு உடல் நலம் பாதிப்பு என்பதால் அதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் அண்ணாமலை இந்த பணியை ஏற்கவில்லை ‌ அதற்குள் கட்சியில் பிரச்சினை என்பது போல இதனை பெரிய பிரச்சனையாக பார்க்க வேண்டாம் அவருக்கு கொடுத்த பணியை அவர் சிறப்பாக செய்து வருகிறார்” என தெரிவித்தார்.