தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்வோர் பேருந்துக்காக கடன் வாங்கி செல்கின்றனர்- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பேருந்துக்காக கடன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமானதா?: வானதி சீனிவாசன் கேள்வி | tamil news Vanathi  Srinivasan bjp Is the word Tamil Nadu illegal

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை குறைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் சில தினங்களுக்கு முன் அறிவித்ததை நான் செய்தித்தாள் மூலம் அறிந்தேன்..  ஆனால் நடப்பதோ வேறு... சென்னையிலிருந்து  மதுரை செல்ல கட்டணம் ரூ.3000 - 3400, நெல்லைக்கான கட்டணம் ரூ.3200 - 3500,  கோவைக்கான கட்டணம்  ரூ.3500 - 4000 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.  


தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பேருந்துக்காக கடன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சொல்வது ஒன்று... செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக அரசு..” எனக் குறிப்பிட்டுள்ளார்.