ஐசியூவில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்

 
ஐசியூவில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.


காலில் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் பிரார்த்தனையே என் வலிமை, உங்கள் நம்பிக்கையே என் மருந்து. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன்... மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம் எனக் கூறியுள்ளார். விரைவில் நேரில் வந்து சந்திக்கின்றேன்.. கோவை வடக்கில் தேர்தல் பணியாற்றும், உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.