தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..! வானதி சீனிவாசன் கண்டனம்

 
‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறையில் உள்ள  சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..

சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறையில் உள்ள  சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது.


சட்டம் ஒழுங்கு பற்றி மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வரும் திமுக அமைச்சர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பண்டிகை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.