சகோதரி கண் முன்பே இளம்பெண்ணை சீரழித்த காவலர்கள்- வானதி கண்டனம்

 
Vanathi seenivasan

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில், இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரி கண் முன்பே சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்சு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில், இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரி கண் முன்பே சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்சு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே, பாலியல் வன்கொடுமை என்ற கொடூரத்தில் ஈடுபட்டிருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின், அவரது அரசும் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட காவலர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காவல்துறை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.