தீட்டு என்பதால் வகுப்பறை வாசலில் தேர்வெழுதிய மாணவி- மனிதத் தன்மையற்ற செயல்: வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

மாதவிடாய் என்ற பெண்களின் இயற்கை சூழற்சியை இத்தனை பெரிதுபடுத்தி அந்த அப்பாவி சிறுமியை வகுப்பறை வாசலில் ஒதுக்கி வைக்கத் துணிந்த அப்பள்ளி ஆசிரியர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியும் இதுபோன்ற மனிதத் தன்மையற்ற செயல்கள் தொடராமல் இருக்க சம்பந்தப்பட்ட பள்ளி  நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

ச்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “நாம் என்ன கற்காலத்திலா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மாதவிடாயின் காரணமாக ஒரு மாணவியை வகுப்பறை வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என கற்பிக்கும்  பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற பெண் அடிமைத்தன மனப்போக்கு புரையோடிக் கிடைப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.  


பல தடைகளைத் தாண்டி அனைத்து துறைகளிலும் தங்கள் காலடித் தடங்களைப் பதித்தாலும், மனதளவில் இன்னும் பலர் பெண்களின் வளர்ச்சியையும் பெண்களுக்கான சமத்துவதத்தையும் ஏற்க மறுக்கிறார்கள் என்பது தான் இதுபோன்ற கொடுமைகளுக்கான அடிப்படைக் காரணம். மேலும், இதுபோன்ற பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளால் முன்னேறும் பெண்ணினம் பின்னோக்கி இழுக்கப்படுவது ஒரு சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல.  எனவே, மாதவிடாய் என்ற பெண்களின் இயற்கை சூழற்சியை இத்தனை பெரிதுபடுத்தி அந்த அப்பாவி சிறுமியை வகுப்பறை வாசலில் ஒதுக்கி வைக்கத் துணிந்த அப்பள்ளி ஆசிரியர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியும் இதுபோன்ற மனிதத் தன்மையற்ற செயல்கள் தொடராமல் இருக்க சம்பந்தப்பட்ட பள்ளி  நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.