மாணவன் மீது சத்துணவு ஊழியர் தாக்குதல்... வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்களும் குற்றவாளிகளே?- வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

சத்துணவு ஊழியர்கள் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டைகளை தங்களது வீடுகளுக்கும் வெளிச்சந்தைகளையும் விற்று விடுகிறார்கள் என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ச்

இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், “திருவண்ணாமலை மாவட்டம் செங்குணம் குள்ளை மேடு ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளியில்,  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சத்துணவு முட்டை கேட்டதற்காக கெட்ட வார்த்தைகள் திட்டி, துடப்பத்தில்,கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார் சத்துணவு ஊழியர். அரசு இந்தத் தாக்குதல் நடத்திய  சத்துணவு ஊழியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அங்கு பணியில் உள்ள சத்துணவு ஆர்கனைசர், பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர்  அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். சத்துணவு ஊழியர் இவ்வாறு நடந்து கொள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  ஆசிரியர்களும் குற்றவாளிகளே?


சத்துணவு ஊழியர்கள் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டைகளை தங்களது வீடுகளுக்கும் வெளிச்சந்தைகளையும் விற்று விடுகிறார்கள்.    சத்துணவு ஊழியர்கள் பற்றாக்குறை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது. இதனை காரணம் காட்டி ஆர்கனைசர்கள் முறையாக சத்துணவு ஊழியர்களை கண்காணிக்க முடிவதில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக சத்துணவில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து பூர்த்தி செய்து உடனடியாக சத்துணவு திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.