ராஜராஜ சோழன் போல மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

மாமன்னன் ராஜராஜ சோழன் போல பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Prime Minister Modi brought change in women's lives' - Vanathi Srinivasan |  'பெண்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி'- வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தியில் நாளை ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகால கனவு. இந்த கனவு இப்போது  நனவாகியுள்ளது.

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாட்கள் தரையில் உறங்கி, கடுமையான விரதம் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது ராமரோடு தொடர்புடைய கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி திரும்பியுள்ளார்.

Vanathi Srinivasan Said That It Is Fair To Spend The Funds Given By Western  Districts In Tamil Nadu To Other Districts | சம நீதிக்காக பாடுபடும் பிரதமர்  மோடியை குறை கூறுவதா? - வானதி சீனிவாசன்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்றி ராமர் கோயில் சாத்தியமாகி இருக்காது. நம் தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் போல ஆயிரமாண்டுகள் தாண்டியும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். ராமர் கோயிலுக்காக 500 ஆண்டுகளாக போராடி அனைவருக்கும் இந்த நேரத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.