திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சாதிய ரீதியிலான தீண்டாமை வன்கொடுமை அதிகரிப்பு- வானதி சீனிவாசன்

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சாதிய ரீதியிலான தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை நெல்லையில் நடந்த சம்பவம் நிரூபித்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த பற்று அட்டையை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், “தமிழகத்தில் போதை பொருட்கள் கிடைப்பது எளிதாகிவிட்டதால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. நெல்லையில் கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தி மிககொடூரமாக தாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எனது கடும் கண்டங்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் போதை பொருட்கள் கிடைப்பது எளிதாகிவிட்டதால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 2, 2023
நெல்லையில் கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தி மிககொடூரமாக தாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எனது கடும்… pic.twitter.com/uwmSSfKBU7
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சாதிய ரீதியிலான தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை நெல்லையில் நடந்த சம்பவம் நிரூபித்துள்ளது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.