அமைச்சர்களின் ஏளனப் பேச்சுகளையும், நிர்வாகிகளின் ரவுடியிசத்தையும் நிறுத்தப் போவது எப்போது?- வானதி சீனிவாசன்
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை பொம்மை ஆட்சியாக நடத்தி விட்டு பிரதமர் ஆட்சியை குறைகூறுவது நகைப்பாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று பிரதமர் மோடியின் வருகையையொட்டி நீண்ட பதிவாக எப்போது வரும் என்ற வகையில் பல கேள்விகளை முன்னிறுத்தியிருக்கிறார்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 23, 2026
முதல்வர் அவர்களே தமிழக மக்கள் உங்களிடம் முன்வைத்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கு இப்போதுவரை விடையில்லை. அதற்கு முதலில் பதில்… https://t.co/EJIKPTlRcs
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று பிரதமர் மோடியின் வருகையையொட்டி நீண்ட பதிவாக எப்போது வரும் என்ற வகையில் பல கேள்விகளை முன்னிறுத்தியிருக்கிறார். முதல்வர் அவர்களே தமிழக மக்கள் உங்களிடம் முன்வைத்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கு இப்போதுவரை விடையில்லை. அதற்கு முதலில் பதில் கூறுங்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக கூறிய தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாதவை ஏராளம். அதை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? அரசின் பல துறைகளில் போராடும் பணியாளர்கள் பணி நிரந்தரம் எப்போது?
இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது எப்போது? வெறும் அறிப்போடு நின்று விட்ட திட்டங்கள் ஏராளம். அதற்கான பணிகள் எப்போது? படிப்படியாக மதுவிலக்கு என்று கூறி தமிழகத்தை மது, போதை மாநிலமாக மாற்றி வருவதை நிறுத்தப் போவது எப்போது? திமுக அமைச்சர்களின் ஏளனப் பேச்சுகளையும், நிர்வாகிகளின் ரவுடியிசத்தையும் நிறுத்தப் போவது எப்போது? இன்னும் ஏராளமான கேள்விகளை உங்கள் விடியா ஆட்சியில் அடுக்கிக் கொண்டே போகலாம்..! இப்படி நீங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை பொம்மை ஆட்சியாக நடத்தி விட்டு பிரதமர் ஆட்சியை குறைகூறுவது நகைப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


