"திமுக துரோகம் செய்தது என்றால் நீங்கள் செய்தது எல்லாம் என்ன?"- காங்கிரஸை விளாசிய வானதி சீனிவாசன்

 
a

திமுகவுக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்கள், இன்று திமுக துரோகம் செய்துவிட்டதாகப் பேசுகிறார்கள் என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது. திமுகவுக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்கள், இன்று திமுக துரோகம் செய்துவிட்டதாகப் பேசுகிறார்கள். திமுகவைப் பார்த்து ‘துரோகம் செய்துவிட்டீர்கள்’ என்கிறார்கள். திமுக கட்சியின் ஆதரவோடும், அக்கட்சியின் தொண்டர்களின் உழைப்பிலும், பணத்திற்கும் வெற்றி பெற்றுவிட்டு, ஓட்டு போட்ட மை காய்வதற்குள் திமுகவுக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்களெல்லாம் இன்று திமுகவைப் பார்த்துத் துரோகம் என்று பேசுகிறார்கள். இது என்ன அநியாயம்? இவர்களது பலம் என்ன, வாக்கு சதவீதம் என்ன என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்றுவிட்டு, இன்று அவர்களைப் பார்த்துத் துரோகிகள் என்று சொன்னால், உங்களுக்கெல்லாம் என்ன பெயர்? திமுகவின் காசில் வென்றுவிட்டு, அவர்களையே எப்படித் துரோகிகள் என்று சொல்லலாம்? 

கோடிக்கணக்கான மக்களின் கனவான திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்ன பண்றது..? அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் பெண்களை நடத்தும் விதத்தை பார்த்தீர்களா..? இந்த அரசுக்கு அனுபவமும் இல்லை.. அக்கறையும் இல்லை. அதிகாரிகளின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதிகாரிகளை வைத்து நாடகமாட முயற்சி செய்தார்கள்" என்றார்.