ஆசிரியர் தினம் - பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!!

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதாக நினைக்க வேண்டாம். ஒழுக்கம் , பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றுவதே ஆசிரியர் பணியின் உன்னத நோக்கம். அப்படிப்பட்ட தெய்வீக பணியை மாணவர்களுக்கு அளித்து வரும் தன்னலமற்ற ஆசிரியர்கள் இன்றைய தினம் மட்டுமல்லாமல், அனைத்து தினங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட கல்வியாளர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள். அவர் பிறந்த ஊர் சர்வபள்ளி, அதற்கேற்ப சர்வமும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மேம்பாடு பற்றிச் சிந்தித்தார். கல்வி, சமயம், சமுதாயம், ஆன்மீகம், தத்துவம், தேசம் ஆகிய கருத்துக்களில் அவர் படைத்த நூல்கள், அத்தனையும் அருமைப் பாடங்கள், அரிய வரலாற்று ஆவணங்கள்.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட கல்வியாளர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள்.
— K.Annamalai (@annamalai_k) September 5, 2022
அவர் பிறந்த ஊர் சர்வபள்ளி, அதற்கேற்ப சர்வமும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மேம்பாடு பற்றிச் சிந்தித்தார். (1/3) pic.twitter.com/oIeOfPFigz

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் சேவைகளை நினைந்து அவரின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எதிர்கால இந்தியாவை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர் தினத்தில் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.