போதைப்பொருள் முன்னேற்ற கழகம்! கும்பகர்ண உறக்கத்தில் மு.க.ஸ்டாலின்- பாஜக

போதைக்கு எதிராக சாட்டையை சுழற்றுவேன் என சூளுரைத்த தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் இதுவரைக் கைதான அவர் கட்சியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர்களைப் பற்றி இன்னும் வாய் திறக்காமல் இருப்பது உண்மையில் விந்தையாக உள்ளது என பாஜக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “போதைப்பொருள் முன்னேற்ற கழகமாக மாறி வரும் திமுக அரசு... கும்பகர்ண உறக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்! திமுக-வின் இராமநாதபுர மாவட்டம் சிறுபான்மை அணியின் துணைத் தலைவர், சுமார் 70 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் கடத்தியதற்காக கிளாம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் கைதாவது இது ஒன்றும் முதன்முறையல்ல!
“போதையில்லா தமிழகமே எங்கள் இலக்கு” என மூச்சிரைக்க வசனம் பேசி நமது சர்வாதிகாரி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போதைய நிலைமை என்ன? தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் - கடத்தல் - கொலை எல்லாம் கட்டுப்பாடின்றி அரக்க எழுச்சி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுகவை சார்ந்த நிர்வாகிகள்தான் அதிகமாக போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது வெட்கக்கேடு. போதைக்கு எதிராக சாட்டையை சுழற்றுவேன் என சூளுரைத்த தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் இதுவரைக் கைதான அவர் கட்சியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர்களைப் பற்றி இன்னும் வாய் திறக்காமல் இருப்பது உண்மையில் விந்தையாக உள்ளது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.