“தங்கத்தை விட தரமான பால்தான் தேவை என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்”-தமிழிசை
தங்க மோதிரம் கொடுக்கப்போகும் முதலமைச்சர், தரமான பாலுக்கான தட்டுப்பாட்டை எப்போது சரி செய்யப் போகிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. .@CMOTamilnadu . குழந்தைகளுக்கு தேவை பால்.... தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்... தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை... .. சென்னை மக்களின் தேவை 30…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 28, 2026
இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. குழந்தைகளுக்கு தேவை பால்.... தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்... தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை... .. சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால் ஆவின் 14.5 லட்சம் லிட்டர்கள் தான் ஆவின் விநியோகிக்கிறது.. ஆவின் பால் பூத்துகளுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது... தங்கம் மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால் தான்.. என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

