“சிறுமிகளை வேட்டையாடியதை நினைத்தால் மனது வேதனை அடைகிறது”- தமிழிசை
குற்றம் செய்தவரும் குற்றம் புரிய உதவியர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “ஓடி விளையாடி படித்து சுதந்திரமாக குழந்தை தன்மையை அனுபவிக்க வேண்டிய குழந்தைகளை தனது சுகத்திற்காக அனுபவித்த கொடூர மனம் படைத்த மிருகத்தனமான மனிதர்களை பார்க்க வேண்டி இருக்கிறது என்று உள்ளம் குமுறுகிறது... ஏழ்மையை பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையை கசக்கி வீசி எறியும் கொடூரங்கள் நடந்தேறியது என்று நினைக்கும் பொழுது மனது பதைபதைக்கிறது.. ஆனால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி அவர்கள் ஆதார முழுமையாக கிடைக்கவில்லை என்று சொல்வது மட்டுமல்லாமல் இன்னொரு வழக்கு அதுவும் பெண்கள் சார்ந்த வழக்கை எதிர்வாதமாக வைக்கிறார்.. எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல பத்திரிகை செய்திகளில் என்றும் பார்த்தோம் என்றால் பல ஆண்டுகாலமாக இந்த தொழிலதிபர் ஜெம் என்றால் மதிப்பு மிக்கவை ஆனால் மதிப்பில்லாத கல் மனத்தை கொண்டு சிறுமிகளை வேட்டையாடியதை நினைத்தால் மனது வேதனை அடைகிறது..
குழந்தைகளை காப்பாற்றாத இவரை காப்பாற்றுவதற்கு பலர் முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஒரு வெறுப்பு ஏற்படுகிறது... சென்று திமுக அரசும் இ தற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் இன்றைய அரசும் அவர் தண்டிக்கப்படுவதில் தீவிரம் காண்பிக்க வேண்டும்... அதுமட்டுமல்ல இந்த பாலியல் கொடூரங்களை செய்வதற்கு பலர் உதவி செய்திருக்கிறார்கள் பலர் உதவி பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது வெட்கி தலைகுனிய வேண்டி இருக்கிறது... குற்றம் செய்தவரும் குற்றம் புரிய உதவியர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு மன ஆறுதல் கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் இந்த கொடூரத்தின் தழும்புகள் அவர்கள் வாழ்க்கை பாதித்து விடாத அளவிற்கு அவர்களை மறுவாழ்விற்கு அவர்களுக்கு கல்வி பலம் ஆன்ம பலம் அளித்து இந்த வடுக்கள் அவர்கள் வாழ்க்கையில் தடம் பதிப்பதை தடுத்து விடாமல் அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு இந்த அரசும் சமுதாயமும் வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

