“காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள் இன்று கொடைக்கானலில்..”- தமிழிசை
ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள் என முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்.. ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!... வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்.... அரசியல் என்பது…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 26, 2026
இதுதொடர்பாக தமிழிசை தனது எக்ஸ் தளத்தில், “ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்.. ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!... வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்.... அரசியல் என்பது அனைவருக்கும் சமமே... திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை... அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல இறக்கத்திற்காகவே... ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள். ஆனால் இதே கூட்டம் தான் அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள்.. புரிந்து கொள்ளுங்கள் இவர்களை.. பொதுநலம் என்று பேசிக்கொண்டு தெரியும் இந்த சுயநலவாதிகளை #DMKfailsTN” எனக் குறொப்பிட்டுள்ளார்.

