கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைத்தால் பிரசாந்த் கிஷோருக்கு நடந்தது தான் விஜய்க்கும் நடக்கும்- தமிழிசை

 
தமிழிசை

ராகுல்காந்தி இதுவரை 95தோல்வியை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் வரும் போது 100 வது தோல்வியை சந்திப்பார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்' - தமிழிசை

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருவேற்காட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தில் திமுக திருவேற்காடு இலக்கிய அணி அமைப்பாளர் குருநாதன்  உட்பட  பல்வேறு கட்சி நிர்வாகிகள் தமிழிசை முன்பாக பாஜகபில் இணைந்தனர்.அவர்களை பாஜக கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை, “பீகார் தேர்தல் வெற்றிக்கு முதலமைச்சர்  நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க மனமில்லை, அது மட்டும் இல்லாமல் பீகார் வெற்றி தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை சந்தேகத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியில் வெற்றிப்பெறும் போது தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து பேசாத ஸ்டாலின் தற்போது பீகார் தேர்தலில் பாஜக வெற்றிக்கு பின் பேசுகிறார். நமக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டனியா?

பீகாரில் எஸ்ஐஆர் மூலம் பாஜக வெற்றி பெற்றது என்று சொல்கிறார்கள். குறிப்பாக சீமான் உள்ளிட்டோர் முஸ்லிம் வாக்குகளை நீக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆனால் பீகாரில் முஸ்லிம் தொகுதிகள் ஆன 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு திருட்டு நடைபெற்றிருந்தால் தனது வாக்கு திருடப்பட்டது என்று மக்கள் வீதியில் இறங்கி போராடி இருக்க மாட்டார்களா? ராகுல் காந்தி வந்த பின்பு இதுவரை 95 தோல்விகளை சந்தித்துள்ளார். இன்னும் ஒரு சில தோல்விகளை சந்தித்தால் 100 வது தோல்வி என்ற நிலை உருவாகும். அது நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு வரும்போது 100 என்ற நிலை உருவாகும் அதற்கு ஸ்டாலின் உறுதுணையாக இருபார். மேலும் பீகார் தேர்தல் பிரசாந்த் கிஷோர் போன்று கட்சி தொடங்கினால் உடனடியாக முதலமைச்சராகி விடலாம் என்று நினைப்பவர்களுக்கும் பாடம் சொல்லிவிட்டு சென்றுள்ளது. அது நடிகர் விஜய்க்கு பொருந்தும். நடிகர் விஜய் பேசும்போதெல்லாம் இரண்டு பேருக்கு தான் போட்டி என்று கூறி வருகிறார். அது நிச்சயம் திமுகவுக்கும் தவெகாவிற்கும் இரண்டாம் இடத்திற்கான போட்டி. தமிழ்நாட்டில் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும், இரட்டை இலைகளுடன் தாமரை கட்டாய மலரும்” என்றார்.