“போன ஆட்சியை பற்றி குறை கூறாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்”- தமிழிசை

 
ச்

ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கை 1 வாரம் கழித்து சி.பி.சி.ஐ.டியிடம் கொடுத்தது ஏன்? உள்நோக்கம் இருக்கா? யாரையாவது காப்பாற்ற முயற்சிக்கிறீங்களா? என தவெக அரசுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா. ஜ. க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “தவெக அரசு சட்டம் ஒழுங்கை இன்னும் அதிகம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். போதைப்பழகத்தையும் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஊழலையும் கட்டுப்படுத்த வேண்டும். போன ஆட்சியை பற்றி குறை கூறாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.  ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கை 1 வாரம் கழித்து சி.பி.சி.ஐ.டியிடம் கொடுத்தது ஏன்? உள்நோக்கம் இருக்கா? யாரையாவது காப்பாற்ற முயற்சிக்கிறீங்களா? 

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அரசு நேரத்தில் தனியார் சிகிச்சை அளிக்க கூடாது என்று மருத்துவதுறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். கஸ்தூரி பாய் பிரசவ மருத்துவமனையில் தண்ணீர் இல்லை.. அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டம், நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளுக்காக  முதல் தவணையாக ரூ. 7500 கோடி வழங்கி இருக்கிறார்கள். எந்தவிதத்திலும் நிதி குறைக்கப்படவில்லை. சிஎம்டிஏ வில் 15 நாளில் 300க்கும்மேற்பட்ட அனுமதி தரப்பட்டு உள்ளது. இன்னும் அதிக கவனத்துடன் விஜய் ஆட்சி செய்ய வேண்டும்.” என்றார்.