“அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்”- தமிழிசை
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி முன்னிட்டு திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “கடந்த ஆட்சியில் இந்து மதத்தை விமர்சனம் செய்து, நிர்பந்தித்து கிண்டல் செய்து அவர்கள் உரிமையை பாதுகாப்பாக செய்ய விடாமல் இருந்ததால்தான் மக்கள் புறக்கணித்தார்கள். இந்த அரசாங்கமும் கோவில்களில் ஏழை மக்கள் கூட சிறப்பு தரிசனத்தை வசதியாக செய்வதற்கான அத்தனை வசதியும் செய்து கொடுக்க வேண்டும். கூட்டங்கள் அதிகமாக இருக்கின்ற நாட்களில் குரு பெயர்ச்சி, திருவண்ணாமலை தீபம், வைகாசி விசாகம் போன்ற எல்லா விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக கூடுகின்ற இடத்தில் அவர்களுக்கு அத்தனை வசதிகளும் ஏற்படுத்திதர வேண்டும். பக்தர்கள் மன நிம்மதியோடு எந்த குறையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு மிக முக்கியம்
அரசாங்கம் இவர்களை திருப்திப்படுத்துகிறேன், அவர்களை திருப்திப்படுத்துகிறேன் என்று சொல்வதற்கு பதிலாக என்று பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் இன்னும் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிங்கப்படை தீவிரமாக செயலாற்ற வேண்டும், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லா தருணங்களிலும் பெற்றோர்கள் மனநிம்மதியாக இருக்க வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கபட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

