மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெரியார் படம் அகற்றம்... திமுக மாநாட்டில் முருகன் படம் இருக்குமா?- தமிழிசை

 
தமிழிசை

பிரதமர் மோடி மாநாட்டில் பெரியார் படத்தை அகற்றியது  குறித்த கேள்விக்கு திமுக மாநாட்டில் முருகன் படத்தை வைப்பீர்களா தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பினார்.


மதுரை ஜிஆர்டி ஹோட்டலுக்கு வந்த பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பார். உங்களுடைய கூட்டணி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்த கூட்டம் எங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். உற்சாகத்தை தரும். கலாச்சாரத்தின் அடிப்படையில் முதலமைச்சர் வரவேற்று இருக்க வேண்டும், ஆனால் அவர் வரவில்லை. 

மக்களை உற்சாகம் செய்வதற்காக மோடி வருகிறார். நல்ல திட்டங்களை அறிவிக்க வருகிறார். வரும்போதெல்லாம் கூட்டணி வரவேண்டும் என்று எண்ணுவதில்லை. திமுக தான் மூழ்குகிற கப்பலாக இருந்து கொண்டு யார், யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களை எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பயத்தை மறைப்பதற்காக விசிகவினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் படத்தை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அகற்றப்பட்டுள்ளது.  திமுக மாநாட்டில் முருகன் படத்தை வைப்பீர்களா, அதே போல் தான் பெரியார் படமும் அகற்றப்பட்டுள்ளது. எந்தப்படம் இடம் பெற வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது மாநாடு நடத்துபவர்களின் உரிமை” என்றார்.